இந்தியாவில் மோடி அரசின் கூட்டாட்சி கல்வி கட்டமைப்பை பலவீனப்படுத்தி வருவதாக சோனியா காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவின் கல்விக் கொள்கை தொடர்பாக ‘3-சி’ நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மோடி அரசைத் தாக்கியுள்ளார். மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை அவர் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள சோனியா காந்தி, தேசிய கல்விக் கொள்கை கல்வியை மையப்படுத்துகிறது. வணிகமயமாக்குகிறது. வகுப்புவாதமாக்குகிறது. மத்திய அரசு கூட்டாட்சி கல்வி கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது. முக்கியமான கொள்கை முடிவுகளில் இருந்து மாநில அரசுகளை விலக்கி வைப்பதன் மூலம், மோடி அரசு கல்வியின் கூட்டாட்சி கட்டமைப்பை பலவீனப்படுத்துகிறது.
89000 பள்ளிகளை மூடுவது, பாஜக-ஆர்எஸ்எஸ் உடன் தொடர்புடையவர்களைச் சேர்ப்பது போன்ற பிரச்சினைகள எழுந்து வருகின்றன. இந்தியாவின் குழந்தைகள், இளைஞர்களின் கல்வி குறித்து தேசிய கல்விக் கொள்கை மிகவும் அலட்சியமாக உள்ளது. இதில், கல்வி முறை பொது சேவை மனப்பான்மையில் இருந்து பறிக்கப்பட்டு, கல்வியின் தரம் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் கல்வி முறையைக் கொல்வது நிறுத்தப்பட வேண்டும்.
கடந்த 11 ஆண்டுகளாக இந்த அரசின் செயல்பாட்டில் கட்டுப்பாடற்ற மையப்படுத்தல் ஒரு சிறப்பு அம்சமாக இருந்து வருகிறது. ஆனால், அதன் மோசமான தாக்கம் கல்வித் துறையில்தான் உள்ளது. மத்திய கல்வி ஆலோசனை வாரியம் 2019 முதல் கூடவில்லை. மத்திய மற்றும் மாநில கல்வி அமைச்சர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
வாரியத்தின் கடைசி கூட்டம் செப்டம்பர் 2019-ல் நடைபெற்றது. ஜனநாயக ஆலோசனையை மோடி அரசு புறக்கணிக்கிறது. மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்பட்டது” என்று அவர் கூறினார்.