தவெக தலைவா் விஜய் பனையூர் அலுவலகம் செல்லும் வழியில் அவரது காரை தவெகவினா் வழி மறித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தவெகவின் பெண் நிா்வாகி அஜிதாவிற்கு மாநில பொறுப்பு வழங்குவதாக உறுதியளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பொறுப்பு எதுவும் வழங்கப்படாததால் தூத்துக்குடி மாவட்டத்தை சோ்ந்த தவெகவினா் பனையூா் கட்சி அலுவலகத்திற்கு குவிந்தனா். அப்போது காாில் வந்த விஜயின் காரை மறித்தனா். தொண்டர்கள் மறித்த போதும் காரை நிறுத்தாமல் விஜய் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயின் காரை வழி மறித்த தவெகவினரை பவுன்சர்கள் குண்டு கட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.
காலை முதல் காத்திருந்தும் விஜய்அழைத்து பேசாததால் தூத்துக்குடி மாவட்ட தவெகவினர் அதிருப்தி அடைந்துள்ளனா். விஜயை சந்திப்பதற்காக தூத்துக்குடி மாவட்ட தவெகவினர் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் பேர் விடுபட்டவங்க விண்ணப்பிக்க ரெடியா? தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்!



