தமிழ் மொழியை காக்க உயிர் நீத்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இதனை முன்னிட்டு சென்னை தண்டையார்பேட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா சுமார் 1000 பேருடன் பேரணியாகச் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினார்.
இப்பேரணி வடகிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர் விஜயகுமாரும் பேரணியில் கலந்து கொண்டனர்.
இதில் அதிமுகவை சேர்ந்த மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கையில் அதிமுக வண்ணம் பொறித்த பலூன்களை கையில் ஏந்தி பேரணியாக சென்றனர்.
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகே தொடங்கிய மௌன பேரணியானது பேண்ட் வாத்தியங்கள் உடன் 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வினோபா நகரில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த மொழிப்போர் தியாகிகளின் படத்திறகு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, மொழிப்போர் தியாகிகளின் நினைவாக பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
