வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடங்குகிறார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வருகின்ற 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் பேசுவதற்காக அனுமதி கடிதம் திருச்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில் கட்சித் தொண்டா்களும், பொதுமக்களும் கலந்துக் கொள்வாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுவதால், உரிய பாதுகாப்பு வழங்கவும் கோரப்பட்டுள்ளது. TVS டோல்கேட், தலைமை அஞ்சலகம் ரவுண்டானா, மேலப்புதூர், பாலக்கரை ரவுண்டானா, மரக்கடை ஆகிய இடங்களுக்கு விஜய் திறந்த வெளி வாகனத்தில் சென்று இறுதியாக சத்திரம் பேருந்து நிலையத்தில் பேச திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 13ஆம் தேதி த வெ கவின் பிரச்சாரம்… உரிய பாதுகாப்பு வழங்க கோரி விஜய் கடிதம்…
-
- Advertisement -