தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொள்கை மற்றும் அரசியல் அறிவிப்புகள் குறித்து பாஜக மூத்த தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சமீபத்திய செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது கூறியதாவது:

“புதிதாக கட்சி தொடங்குபவர்கள் மக்களைக் கவர பல வாக்குறுதிகளை அளிக்கலாம். ஆனால், தமிழக வெற்றிக் கழகம் தற்போது வெளியிட்டு வரும் அறிவிப்புகள் எதார்த்தத்திற்குப் புறம்பாகவும், அரசியல் முதிர்ச்சியற்றதாகவும் இருக்கின்றன. அவர்களின் கொள்கை என்ன என்பதே இன்னும் மக்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை.”
தொடர்ந்து பேசிய அவர், தவெக முன்வைக்கும் சில அரசியல் நிலைப்பாடுகள் ஏற்கனவே திராவிடக் கட்சிகளால் பேசி சலித்துப் போனவை என்று குறிப்பிட்டார். “திராவிட மாடல் என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு, மறுபக்கம் ஆன்மீகத்தையும் கையில் எடுக்க முயல்வது மக்களை ஏமாற்றும் செயல். தவெக-வின் அறிவிப்புகளை மக்கள் ஒருபோதும் சீரியஸாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. சமூக ஊடகங்களில் வேண்டுமானால் இது விவாதமாக இருக்கலாம், ஆனால் கள யதார்த்தம் வேறாக இருக்கிறது,” என அவர் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பாஜக பலமாகத் தடம் பதித்து வருவதாகவும், மற்ற கட்சிகளின் வருகை பாஜகவின் வாக்கு வங்கியைப் பாதிக்காது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி பாஜக பலமாகத் தடம் பதித்து வருவதாகவும், மற்ற கட்சிகளின் வருகை பாஜகவின் வாக்கு வங்கியைப் பாதிக்காது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
