spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘என் 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில்...’ ஆதவ் அர்ஜூனா-வால் மனம் நொந்த திருமா..!

‘என் 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில்…’ ஆதவ் அர்ஜூனா-வால் மனம் நொந்த திருமா..!

-

- Advertisement -

ஆதவ் அர்ஜூனா விலகல் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருந்து வந்த ஆதவ் அர்ஜூனா அக்கட்சியில் இருந்து முழுமையாக விலகுவதாக நேற்று அறிவித்தார்.file:///C:/Users/pc2/Downloads/116105169.webp

we-r-hiring

‘‘எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள், மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடம் வெளிப்படும் கருத்துக்கள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒரு கட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து என்னை முழுமையாக விடுவித்துக் கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன்’’ எனக் கூறி இருந்தார்.

அதற்கு விளக்கமளித்த விசிக தலைவர் திருமாவளவன், ‘‘என் 35 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இதுவரை 2 பேர் மீது மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அதுவும் இடைநீக்கம் மட்டுமே. ஆதவ் அர்ஜூனா விளக்கம் கேட்பார். அதற்கு விளக்கம் கொடுத்து விசாரிக்கலாம் என்றுதான் இருந்தேன். அதற்கான வாய்ப்பை அவர் இழந்து விட்டார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விசிக இடம்பெற்ற போதிலும் ஆதவ் அர்ஜூனா தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்துள்ளார். இதனால் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

MUST READ