Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள்!

தமிழ்நாட்டு மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் பங்கேற்பார்கள்!

-

- Advertisement -

ஆன்லைன் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையில் 11 பேரின் உயிரிழப்பிற்கு ஆளுநர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டு நலன், மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள் ஆளுநர் அளிக்கும் எந்த தேநீர் விருந்திலும் பங்கேற்பார்கள் என்று கூறினார்.

we-r-hiring

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், தமிழர் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுபவராக தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் தமிழ்நாட்டு மக்கள் பற்றி கவலையில்லாமல் அதிமுகவும் பாஜகவும் தேநீர் விருந்து  ஏற்றுக்கொள்கிறார்களா? என்றும் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பினார்.

ஈரோடு கிழக்கில் பெரியாரின் பேரன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார், அவரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் டெபாசிட்டை இழப்பார்கள் என்றும் செல்வபெருந்தகை தெரிவித்தார்.

MUST READ