spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்ஈபிஎஸ் புரட்சித் தமிழர் அல்ல துரோகத் தமிழர்- டிடிவி தினகரன்

ஈபிஎஸ் புரட்சித் தமிழர் அல்ல துரோகத் தமிழர்- டிடிவி தினகரன்

-

- Advertisement -

ஈபிஎஸ் புரட்சித் தமிழர் அல்ல துரோகத் தமிழர்- டிடிவி தினகரன்

தஞ்சாவூர் மாநகர் மாவட்டம், திருவையாறு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு S.செந்தில்குமாரின் இல்லத் திருமண விழாவில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார்.

Image

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், “எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் துரோகத் தமிழர் என பட்டம் கொடுக்கலாம், பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல, வீழ்ச்சி மாநாடு. மக்களின் எண்ணத்துக்கு எதிராக செயல்படுவதால் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் வேறுபாடில்லை. எடப்பாடி பழனிசாமியும், முதல்வர் மு.க.ஸ்டாலுனும் ஹிட்லரின் இரு சகோதரர்கள். நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததில் தவறில்லை. யோகி ஆதித்யநாத் ஒரு துறவி, அவர் காலில் விழுவது தவறில்லை. துறவி என்பதால் வயது வித்தியாசம் பார்க்கக்கூடாது.

we-r-hiring

Image

பழனிசாமி நடத்தியது எழுச்சி மாநாடு அல்ல, வீழ்ச்சி மாநாடு. பாஜகவுடன் உறவு கிடையாது, கூட்டணி குறித்து சரியான நேரத்தில் முடிவு செய்யப்படும். காவிரி விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக நீதிமன்றத்தை அணுக வேண்டும்” என்றார்.

MUST READ