தேர்தல் தொடர்பான முடிவை எடுக்கும் நேரம் இதுவல்ல- வானதி சீனிவாசன்
திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என அதிமுக உடனான கூட்டணி குறித்து அண்ணாமலை பேசியதற்கு வானதி சீனிவாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “லோக்சபா தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி வைத்தால் தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன். நான் தேசிய மேனேஜர் அல்ல, கட்சியின் மாநில தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கிறேன். என் ஸ்டைலில் செயல்பட முடியாதபோது நான் ராஜினாமா செய்துவிட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன்” என்றார்.

இதுகுறித்து வானதி சீனிவாசன் பேசுகையில், “பாஜகவின் மைய குழுவில் பேச வேண்டிய கருத்தை ஏன் இப்போது பேசுகிறீர்கள்? தேர்தல் தொடர்பான முடிவை எடுக்கும் நேரம் இதுவல்ல” எனக் கூறியுள்ளார். இதேபோல் அண்ணாமலையின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக அமைப்புச் செயலாளர் ஆதி ராஜாராம், “அதிமுகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்ற அண்ணாமலையின் கருத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.சொந்த கட்சிக்காரர்களையே வேவு பார்க்கும் நோயை உருவாக்கியவர் அண்ணாமலை” என்றார்.