விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏவும், மாவட்ட திமுக செயலாளருமான புகழேந்தி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி தொகுதிக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
தேர்தலுக்கான வேட்புமனு இன்று (ஜூன் 14) முதல் வரும் 21 ஆம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வரும் 24 ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற வரும் 26 ஆம் தேதி கடைசி நாள் என்றும் அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து ஜூலை 10 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று ஜூலை 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதை தொடர்ந்து இன்று காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்ற நிலையில் நான்கு சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இன்னும் பிரதான கட்சிகளில் இருந்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் 20 அல்லது 21 ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு (apcnewstamil.com)
திமுக வேட்பாளராக மாநில விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா, அதிமுக வேட்பாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ் செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பாக மருத்துவர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக கூட்டணி வேட்பாளர் குறித்து இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை.