ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது. அதுதான் விவசாயிகளின் நிலைப்பாடு. ஒன்றிய அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த பிஆர்.பாண்டியன் நாகைபட்டினத்தில் பேட்டி அளித்தார்.
மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளை கடைபிடித்து வருகிறது. அரிசி மிகை உற்பத்தி காலத்தில் வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தடை விதித்து மத்திய அரசு விவசாயிகளின் வயிற்றில் அடித்துள்ளது.


வேளாண் விரோத சட்டங்களை டெல்லியில் போராடிய விவசாயிகளிடம் திரும்ப பெறுவதாக மோடி அறிவித்தார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விவசாயிகளை மத்திய அரசு ஏமாற்றி வருகிறது.
குறைந்த பட்ச ஆதார விலையை அறிவித்த மத்திய அரசு அதற்கான குழுக்கள் இதுவரை செயல்படவில்லை.
வருகின்ற மார்ச் 1 ஆம் தேதி குமரியில் தொடங்கி மார்ச் 20 ஆம் தேதி டெல்லி நோக்கி ஒன்றிய அரசை கண்டித்து யாத்திரை நடைபெற உள்ளது.
பாஜக தவிர அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளுக்கு அழைப்பு. மார்ச் 21 ஆம் தேதி டெல்லியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடைப்பெறும்.
உத்திரபிரதேச தேர்தலை மனதில் வைத்தே ஒருவருடம் டெல்லியில் போராடிய விவசாயிகளிடம் வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்து விவசாயிகளை அப்போது ஏமாற்றி உள்ளார்.

விவசாய விரோத செயல்களை மேற்கொள்ளும் பிரதமர் மோடியை கண்டித்து நடைபெறும் இந்த பேரணியில் தமிழக விவசாயிகள் மீது நலன் கொண்ட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்க வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் வேட்பாளர்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது. அதுதான் விவசாயிகளின் நிலைப்பாடு.
