”என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுக்கட்டா கற்பழிச்சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க” என சீமான் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சம்மன் விவகாரம் குறித்து தர்மபுரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”அந்த அழைப்பானை நான் படிக்கவா நாட்டு மக்கள் படிக்கவா?. இல்ல அதை அப்படியே வச்சு, கட்டம் போட்டு பூஜை அறையில் மாட்டிக்கணுமா?. என் காவலாளி அடிச்சதுல அவங்களுக்கு கீறல் பட்டுடுச்சாம், நீங்க அடிச்சதில் அவருக்கு காயம் பட்டு இருக்கு. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவை தேர்தல் வருது பலமுறை ஆட்சிகள் மாறுதுங்கிறதை மறந்துட்டு. இவங்களே அந்த அந்த நாற்காழியில அப்படியே நிரந்தரமா பசையை போட்டு ஒட்டுன மாதிரி, நம்ம கீழே இறங்கவே போறதில்லைங்கிற திமிர்ல ஆடுற ஒரு ஆட்டம்.

என்ன பாலியல் வழக்கு, பாலியல் வழக்குன்னு சொல்லுறீங்க. ரெண்டு பக்கமும் சரியாக விசாரிக்க வேண்டும். என்னமோ வயசுக்கு வந்து குச்சுல உட்கார்ந்துட்டு இருக்குற புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வச்சி குண்டுக்கட்டா கற்பழிச்சு விட்ட மாதிரி எல்லாரும் கதறிட்டு இருக்கீங்க. இதே சீமான் இயக்குநராக இருக்கிறேன். படம் எதுவும் இல்லாமல் வீட்டில் இருக்கிறேன் என்றிருந்தால், இந்த வழக்கை இப்படி பேசுவீர்களா?
ஒட்டுமொத்த அதிகாரமும் என்னை சமாளிக்க முடியாததால், கருத்தியல் ரீதியாக மோத முடியாததால் ஒவ்வொரு முறையும், ஒரு பொம்பளையைக் கொண்டு வந்து நிறுத்துறீங்க என சிரித்துக் கொண்டே பதிலளித்துள்ளார். சீமானின் இந்த கருத்தை மகளிரணி நிர்வாகிகள் புடைசூழ பேசியிருப்பது சோசியல் மீடியாவில் விமர்சனமாக மாறியது.
இந்நிலையில் தர்மபுரியில் சர்ச்சையாக பேசியதற்கு புதிய விளக்கமளித்துள்ள சீமான், “விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை கடத்திச்சென்று வன்கொடுமை செய்தால்தான் குற்றம். விருப்பத்துடன் உறவுகொண்டால் அதற்கு பெயர் என்ன? நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயத்தைக் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியாமல் அந்தப் பெண்ணை கூட்டி வருகிறார்கள்” என விளக்கமளித்துள்ளார்.