Homeசெய்திகள்அரசியல்டெல்லியில் யாரை சந்திக்கிறார் இ.பி.எஸ்..? எல்லாம் எங்களுக்குத் தெரியும்… அதிமுகவை அதிர விட்ட மு.க.ஸ்டாலின்

டெல்லியில் யாரை சந்திக்கிறார் இ.பி.எஸ்..? எல்லாம் எங்களுக்குத் தெரியும்… அதிமுகவை அதிர விட்ட மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திடீரென டெல்லி புறப்பட்டு சென்று குறித்து சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து இருக்கிறார். யாரை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று இருக்கிறார் என்ற தகவலும் எங்களுக்கு வந்திருக்கிறது என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

அதிமுக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளதால் தமிழக அரசியல் களத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து மு.க.ஸ்டாலின் பேசும்போது ”அதிமுகவை சேர்ந்த எதிர்க்கட்சியின் துணைத் தலைவர் பேசுகிறபோது நாங்கள் என்றைக்கும் மும்மொழிக் கொள்கை விஷயத்திலே ஆதரவாக இருப்போம் என்று உறுதி தந்தார்.

"தனது அரசியல் சட்டக்கடமைகளைச் செய்யவே மனமில்லாதவர் அந்தப் பதவியில் ஏன் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும்?" – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்றைக்கு காலையில்கூட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லிக்கு சென்று இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. டெல்லியில் சென்று யாரை சந்திக்கப் போகிறார் என்கிற செய்தி வந்திருக்கிறது. அப்படி சந்திக்கின்ற நேரத்திலே இது குறித்து வலியுறுத்த வேண்டும். இந்த வேண்டுகோளை வலியுறுத்த வேண்டும் என்று இந்த அவை மூலமாக எடுத்துரைக்க கடமைப்பட்டு இருக்கிறேன்.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியப்படாது – இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் – எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு

ஏனென்றால் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய அதிமுகவை சேர்ந்த எதிர்க்கட்சியின் துணை தலைவர் பேசுகின்ற பொழுது நாங்கள் என்றைக்கும் மும்மொழி கொளை விஷயத்திலே உறுதுணையாக இருப்போம் என்று உறுதி தந்திருக்கிறார்” எனத் தெரிவித்தார்.

MUST READ