Homeசெய்திகள்அரசியல்ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?

ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?

-

- Advertisement -

இடைத்தேர்தல் அப்படின்னு சொன்னாவே அங்கு ஆளுங்கட்சி தான் வெற்றி பெறும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு எழுதப்படாத விதி. ஆனால் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மட்டும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்த பொழுது நடந்த இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.

ஒரு தொகுதியில் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். மற்றொரு தொகுதியில் எதிர்க்கட்சியான திமுக வெற்றி பெறறது.

we-r-hiring

அதிமுகவின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அரசியல் நிர்வாகம் சரியில்லை என்பதும் டிடிவி தினகரன் அளித்த இலவச பொருட்கள் குறித்த அறிவிப்புகள் தான் என்று சொல்லப்பட்டது.

மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக இருந்து திமுகவை திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி ஆட்சி நடத்தி வந்து கொண்டிருக்கிறார்.

இந்த காலகட்டத்தில் திருமகன் ஈவேராவின் மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதில் வெற்றி பெறப்போவது யார்?

அதிமுக வா? ஆளும் திமுக வா? பாஜகவா? தேமுதிக வா வாருங்கள் விவாதிப்போம்!

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. கூட்டணி அடிப்படையில் ஈரோடு தொகுதி காங்கிரஸ் அளிக்கப்பட்டது.

அதேபோல் இப்பொழுதும் காங்கிரசுக்கு தான் வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் கேட்டனர் திமுகவும் காங்கிரஸுக்கு மீண்டும் அத்தொகுதியை விட்டுக் கொடுத்தது.

அதிமுக இரு அணிகளாக இருப்பதால் இரு அணிகளும் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

பாஜக ஒரு குழப்ப நிலையில் இருந்து இறுதியாக தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் தமிழ்நாட்டின் தலைவர் அண்ணாமலை அறிவித்துவிட்டார்.

தேமுதிகவோ ஒரு படி மேலே சென்று தனித்தே தான் போட்டியிட போகிறோம் என்று சொல்லி இவர் தான் வேட்பாளர் என்று அறிவித்துவிட்டார் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்.

தற்பொழுது நிலவரப்படி தேர்தல் களத்தில் இருப்பது மூன்று கட்சிகள் தான் ஒன்று திமுக காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளர் டிவிஎஸ் இளங்கோவன், மற்றொன்று இருஅணிகளாக இருந்தாலும் அதிமுக, மற்றும் மூன்றாவதாக இருப்பது தேமுதிக

இதில் வெற்றி பெறப்போவது யார்?

ஈரோடு கிழக்கு தொகுதி ஆனது, ஈரோடு மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி திமுகவின் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றுள்ளார்.

2008 ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இந்த தொகுதி ஈரோடு தாலுக்கா பிராமணர் அக்ரகாரம், ஈரோடு நகராட்சி மற்றும் வீரப்பன்சத்திரம் பேரூராட்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டின் முக்கிய பகுதிகள் அனைத்தும் இந்த தொகுதிக்குள் வருகின்றன. குறிப்பாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, ஈரோடு பேருந்து நிலையம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், ஜவுளி சந்தை, காய்கறி சந்தை, முக்கிய கடைவீதிகள் என அனைத்தும் ஈரோடு கிழக்கு தொகுதிக்குள் வருகிறது.

2008 ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பிறகு இங்கு மூன்று சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்று உள்ளது. 2011 இல் அதிமுகவும் 2016 தொடர்ந்து மீண்டும் அதிமுகவே வெற்றி பெற்றது.

2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. திருமகன் ஈவேரா 8904 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,000 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில் 1,10,713 ஆண் வாக்காளர்களும்,1,16,140 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

இவற்றுள் 23 மாற்றுபாலின வாக்காளர்கள், 22 பேர் ராணுவ வாக்காளர்கள் ஆக மொத்தம் 2,26,898 வாக்காளர்கள் உள்ளனர்.

இவர்களுக்காக இங்கே 52 இடங்களில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுள்ளது.

ஜாதி அடிப்படையில் பார்த்தால் இங்கு கொங்கு வேளாளர்கள் எனப்படும் கவுண்டர் சமூகத்தினரே அதிகம் வசிக்கின்றனர். சுமார் 75 ஆயிரம் பேர் உள்ளனர்.

அதைத் தொடர்ந்து முதலியார், அருந்ததியர் ஆகிய சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர். முதலியார் சமூகத்தில் இருந்து மட்டும் 54 ஆயிரம் வாக்குகள் இதுவரை பதிவாகியுள்ளது.

சுமார் 35 ஆயிரம் வாக்குகள் எஸ்சி சமூகத்திலிருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் 27 ஆயிரத்து 600, கிறிஸ்தவர்கள் 16 ஆயிரம் பேரும் வட மாநிலத்தைச் சார்ந்தவர்கள் 8,300 பெரும் இத்தொகுதியில் உள்ளனர்.

இங்கு ஜவுளி தொழிலே பெரும்பான்மையான தொழிலாக உள்ளது. ஜவுளி தொழிலை சார்ந்த சாயத்தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு நிறைய பேர் வசித்து வருகின்றனர்.

MUST READ