
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் சரத்பவார்.
கட்சியின் தலைவர் பதவி பதவியில் இருந்து சரத்பாவார் விலகுவதாக அறிவித்துள்ளார் என்றாலும் எதற்காக பதவி விலகுகிறேன் என்கிற காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை . அடுத்து கட்சியின் தலைவராக யார் பதவி ஏற்க வேண்டும் என்பது குறித்தும் அவர் அறிவிக்கவில்லை. இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த 1999 ஆம் ஆண்டில் ஜூன் 10ஆம் தேதி அன்று காங்கிரஸிலிருந்து பிரிந்த சரத்பவர் மற்றும் பி.ஏ.சங்மா உள்ளிட்டோர் தேசியவாத கட்சியை தொடங்கினர். அன்று முதல் அக்கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்தார் சரத்பவார் .
இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் முக்கியமானவராக விளங்கி வந்தார் சரத்பவார். மகாராஷ்டிராவில் சிவசேனா ,காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உருவாக முக்கிய பங்கு வகித்தவர் சரத்பவார். நெருங்கிய உறவினர் அஜித் பவரை மையமாக வைத்து பல்வேறு யூகங்கள் உருவாகி வந்தன. இதனால் கட்சியில் பிளவு படும் சூழ்நிலை இருந்தது . இந்த நிலையில் சரத்பவார் தலைவர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார்.