spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்25 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய போலி ஐஆர்எஸ் அதிகாரி

25 பெண்களை காதல் வலையில் வீழ்த்திய போலி ஐஆர்எஸ் அதிகாரி

-

- Advertisement -

போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் போலி ஐஆர்எஸ் அதிகாரி எனக்கூறி 25க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றிய ஆசாமியை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர் இந்திய வருவாய் சேவையின் அதிகாரி எனவும், ஜெய்ப்பூரில் வேலை பார்ப்பதாகவும் கூறி பெண்களை ஏமாற்றி வந்துள்ளார். அரசு வேலைகளில் பணிபுரியும் பெண்கள் தான் இவரது டார்க்கெட். ஜெய்ப்பூரில் ஒரு ஹோட்டலில் ஒரு பெண்ணை சந்திக்க வந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர்.

ஜெய்ப்பூரில் உள்ள வித்யாதர் நகர் காவல் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பெண் சப்-இன்ஸ்பெக்டர் கிருத்திகா கோயல் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வ்அழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஜெய்ப்பூரின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின் மண்டல இயக்குநர் சர்வேஷ் குமாவத் என்கிற பெயரில் தன்னைப்பற்றி தனது சகோதரருக்கும், நண்பருக்கும் செல்போனில் தவறான தகவல் அனுப்புவதாக கிருத்திகா குற்றம் சாட்டினார்.

we-r-hiring

தன்னை 2020 ஆம் ஆண்டின் ஐஆர்எஸ் அதிகாரி என்று கூறி வந்துள்ளார். கனிகா கோயல் அதே துறையில் இருப்பதால், அவருக்கு அனைத்து உயர் அதிகாரிகளையும் தெரியும். இதுகுறித்து கனிகா வித்யாதர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நவம்பர் 9, சனிக்கிழமையன்று, சர்வேஷ் ஒரு பெண்ணைச் சந்திக்க ஜெய்ப்பூருக்கு வந்தபோது, ​​​​போலீசார் அவரைக் கைது செய்தனர்.

வித்யாதர் நகர் காவல் நிலைய போலீஸார் கூறுகையில், ‘‘குற்றம் சாட்டப்பட்ட நபர் மிகவும் கொடூரமானவர். அதிகாரி போல் நடித்து பல பெண்களை வலையில் சிக்க வைப்பது இவரது வழக்கம். பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் பல பெண்களை தொடர்பு கொள்வார். அவரது மொபைலை சோதனை செய்தபோது அவர் 25 க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் மூன்று பெண்கள் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள். இந்த போலி அதிகாரியின் வலையில் சிக்கிய பெரும்பாலான பெண்கள் அரசு வேலை செய்து வருகின்றனர்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் உஜ்ஜைன் (மத்தியப் பிரதேசம்) பகுதியைச் சேர்ந்தவர். அவரது மொபைலில் பெண்களுடன் ஆபாசமாக பேசுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

தனது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் அவர் பல பெண்களிடம் பணம் பெற்றுள்ளார். எமர்ஜென்சி என்று சொல்லி பணத்தை வாங்கிக்கொண்டு பல நாட்கள் தள்ளிப்போட்டுக்கொண்டே இருப்பார். அவர் தனது சமூக ஊடக கணக்கின் டிபியில் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் உதவி இயக்குனர் சர்வேஷ் குமாவத் என்று தெரிவித்துள்ளார்.

MUST READ