spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா நடத்தாது ... பிசிசிஐ தகவல்

மகளிர் டி20 உலகக்கோப்பையை இந்தியா நடத்தாது … பிசிசிஐ தகவல்

-

- Advertisement -

மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டித் தொடரை இந்தியா நடத்தாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா பதவி விலகியுள்ள நிலையில், அந்நாட்டில் இடைக்கால அரசு பொறுப்பேற்று கொண்டுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் போராட்டம் தொடர்வதால் மகளிர் டி20 உலகக் கோப்பை இந்தியாவுக்கு மாற்றப்படும் என்று தகவல் வெளியானது.

we-r-hiring

இந்தநிலையில், இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை போட்டித் தொடர் நடத்தப்படாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், வங்கதேச போராட்டங்களை தொடர்ந்து, இந்தியாவில் உலகக் கோப்பை நடத்துவது குறித்து ஐசிசி முறையிட்டதாக தெரிவித்தார். ஆனா ல், மழைக்காலம் என்பதால் இந்தியாவில் போட்டியை நடத்த மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக கூறினார்.

ஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!
Photo: BCCI

மேலும் 2025ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டித் தொடரை இந்தியா நடத்துவதால், அடுத்தடுத்து உலகக் கோப்பைகளை நடத்தும் எண்ணம் பிசிசிஐக்கு இல்லை என்றும் ஜெ ய் ஷா தெரிவித்தார்.

MUST READ