Homeசெய்திகள்விளையாட்டு45வது செஸ் ஒலிம்பியாட் - தங்கம் வென்று இந்தியா சாதனை

45வது செஸ் ஒலிம்பியாட் – தங்கம் வென்று இந்தியா சாதனை

-

- Advertisement -

ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது.

ஹங்கேரி தலைநகர் புத்தாபெஸ்டில்  45வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்று வந்தன. இதன் ஓபன் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஸ்லோவேனியா அணியுடன் மோதியது. குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, பென்டல ஹரிகிருஷ்ணா, ஸ்ரீநாத், விதித் ஆகியோர் அடங்கிய இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு போட்டியை சமன் செய்தது.

புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பிடித்த இந்திய அணி முதன் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தது. கடந்த முறை சென்னையில் நடைபெற்ற 44வது செஸ் ஒலிம்பியாட்டில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றிருந்த நிலையில், தற்போது இந்திய அணி தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது.

MUST READ