
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், மேலும் மூன்று போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் பந்துவீசும் போது, கணுக்காலில் காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருகிறார். காயத்தில் இருந்து அவர் முழுமையாக மீளாததால், மேலும், இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட இயலாத நிலை உள்ளதாக, தேசிய கிரிக்கெட் அகாடமி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹர்திக் பாண்டியா முழுமையாகக் குணமடைய அவகாசம் அளிக்கலாம் என்றும், நாக் அவுட் சுற்றுக்கு அவர் முழு உடல் தகுதி அடைய வேண்டும் என்பதால், அடுத்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ஓய்வளிக்கலாம் என்றும் கிரிக்கெட் அணி நிர்வாகம் கருதுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி விழா…. திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பங்கேற்பு!
ஹர்திக் பாண்டியா போட்டியில் சேர்க்கப்படாத பட்சத்தில் சூர்யகுமார் யாதவ்- க்கு மேலும் சில போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.