Homeசெய்திகள்விளையாட்டுதகுதி நீக்கத்தில் தப்பி பதக்கத்தை வென்ற அமன்

தகுதி நீக்கத்தில் தப்பி பதக்கத்தை வென்ற அமன்

-

தகுதி நீக்கத்தில் தப்பி பதக்கத்தை வென்ற அமன்

அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைத்து வெண்கலம் வென்றார். ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு 6-வது பதக்கம்…

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் வெண்கல பதக்கத்துக்கான போட்டி நடக்கும் முன், 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடையை அமன் ஷெராவத் குறைத்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகத் எப்படியும் இந்தியாவுக்கு தங்க பதக்கத்தை தட்டிக் கொண்டு வருவார் என்று கோடானகோடி மக்கள் காத்திருந்தனர். அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்ற அறிவிப்பு வெளியானதும் நாடே சோகமானது.

வினேஷ் போகத்  100 கிராம் எடையால் இறுதிப்போட்டியில் விளையாடும் தகுதியை இழந்தார். இதனை தொடர்ந்து எடை குறைப்பு விஷயத்தில் அதிகபட்ச கவனத்துடன் வீரர்களும், பயிற்சியாளர்களும் இருக்கவேண்டும் என்பதை இந்த விவகாரம் தெளிவுபடுத்தியுள்ளது.

அமன் ஷெராவத் 57 கிலோ மல்யுத்த அரையிறுதி போட்டியில் பங்கேற்பதற்கு முன்பாக அவரது எடை 61.5 கிலோவாக இருந்துள்ளது. அதனால் போட்டியில் தோற்றுவிட்டதால் வெண்கலப்பதக்க போட்டிக்கு தயாராகியுள்ளார்.

இந்நிலையில் விழித்துக்கொண்ட அமன் ஷெராவத் 10 மணி நேரத்தில் 4.6 கிலோ எடை குறைத்து வெண்கலப்பதக்கத்தை தாய்நாட்டுக்காக பெற்று தந்துள்ளார்.

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள்….. முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்கிய பிரபல நடிகைகள்!

மிகுந்த கவனத்துடன் எடை குறைப்புக்காக நள்ளிரவு 12.30 மணிக்கு 1 மணி நேரம் சுடுநீரில் குளியல், பின்னர் உடற்பயிற்சிக்கூடத்தில் 1 மணி நேரம் ஓட்ட பயிற்சி (டிரெட்மில்), அடுக்கி வைக்கப்பட்ட கற்கள் மீது சூடான நீரை ஊற்றி, அதன் மூலம் வெளியாகும் நீராவியில் குளிப்பது என அமன் கடுமையான பயிற்சிகளை செய்திருக்கிறார். இரவு முழுவதும் எடை குறைக்கும் பயிற்சிகளில் முழு ஈடுபாடுன் இருந்துள்ளார். அதிகாலை 4.30 மணியளவில் எடையை பரிசோதித்து பார்த்த போது 56.9 கிலோ எடையாக இருந்திருக்கிறார். கிட்டத்தட்ட 100 கிராம் எடை குறைவாக இருந்ததால் தகுதி இழப்பில் இருந்து தப்பித்து உள்ளார் என தெரிவித்துள்ளார்.

MUST READ