Homeசெய்திகள்சினிமாவயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள்..... முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்கிய பிரபல நடிகைகள்!

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள்….. முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்கிய பிரபல நடிகைகள்!

-

- Advertisement -

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு கடந்த சில தினங்களாக இந்தியர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள்..... முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்கிய பிரபல நடிகைகள்!இந்த நிலச்சரவில் மூன்று கிராமங்கள் மண்ணில் புதைந்த நிலையில் கிட்டத்தட்ட 400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இயற்கை பேரிடர் காரணமாக கேரள மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. ஏராளமான மக்கள் தங்கள் உறவுகள், வீடுகள் ஆகியவற்றை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதாவது இந்த நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்பு கிட்டத்தட்ட 5000 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே திரைப் பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகின்றனர். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்கள்..... முதல்வரை நேரில் சந்தித்து நிதி வழங்கிய பிரபல நடிகைகள்!அதன்படி ஏற்கனவே விக்ரம், சூர்யா, கார்த்தி, பிரபாஸ் போன்றவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் கேரள முதல்வரிடம் லட்சங்களிலும் கோடிகளிலும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் 80 காலகட்டங்களில் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயின்களாக திகழ்ந்த குஷ்பூ, மீனா, சுஹாசினி உள்ளிட்டோர் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை நேரில் சந்தித்து ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ