
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்
2023- ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி முதல் செப்டம்பர் 17- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளுக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வரும் செப்டம்பர் 2- ஆம் தேதி அன்று இலங்கை கண்டி மைதானத்தில் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 4- ஆம் தேதி கண்டியில் நடைபெறும் போட்டியில், இந்தியா அணி, நேபாளம் அணியை எதிர்கொள்கிறது.

பாகிஸ்தான், நேபாளம் அணிகள் மோதும் போட்டியும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டியும் பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி அன்று இலங்கையின் கொழும்புவில் ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தள்ளுபடி!
கடந்த முறை இலங்கை அணி, ஆசியக் கோப்பை கிரிக்கெட் சாம்பின்ஷிப்பைக் கைப்பற்றி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.