
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் நேபாளம் அணியை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொண்டது.
“தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!
முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜெய்ஷ்வால் 100 ரன்களையும், ரிங்கு சிங் 37 ரன்களையும், ருதுராஜ் கெய்க்வாட் 25 ரன்களையும், சிவம் துபே 25 ரன்களையும் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து விளையாடிய நேபாளம் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
வடமாநிலங்களில் நில அதிர்வு….வீட்டை விட்டு வெளியேறிய மக்கள்!
இந்திய அணி தரப்பில் ரவி பிஸ்னோய், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 1 விக்கெட்டையும் எடுத்தனர்.