
நேபாளம் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது.

அரசு மருத்துவமனையில் 48 மணிநேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பலி
நேபாளம் நாட்டில் பட்டேகோடா பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்.03) பிற்பகல் 02.25 மணியளவில் டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். டெல்லியில் சுமார் 40 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்த நிலையில், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
சூப்பர் மார்கெட்டில் சிறுமி பலி! தெலங்கானாவில் நடந்த சோகம்
டெல்லி மட்டுமின்றி, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்துகுஷ் மலைப்பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியா, நேபாளம், சீனா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது.