- Advertisement -
எருமேலியில் உள்ள 2,263 ஏக்கர் செருவேலி எஸ்டேட் வழக்கில் கேரள அரசுக்கு எதிராக பாலா சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
சபரிமலை விமான நிலையத்திற்கு தேர்வுசெய்த நிலம் தனியாருக்கு சொந்தமானது என கேரள நீதிமன்றம் உறுதிபடுத்தியது. எருமேலியில் உள்ள 2,263 ஏக்கர் செருவேலி எஸ்டேட் வழக்கில் கேரள அரசுக்கு எதிராக பாலா சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. 2005 ஆம் ஆண்டு ஹாரிசன் மலையாளம் எஸ்டேட் நிர்வாகம் நிலத்தை விற்றதை எதிர்த்து கேரள அரசு வழக்கு தொடுத்தது. அந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியானது. 2005 ஆம் ஆண்டு அயானா அறக்கட்டளைக்கு எஸ்டேட்டை ஹாரிசன் நிறுவனம் விற்பனை செய்தது. நீதிமன்றத்தின் இத்தீர்ப்பு கேரளாவில் உள்ள பல எஸ்டேட் உரிமை வழக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.


