அமைச்சராக பதவி ஏற்று, 7 மாதங்கள் ஆகியும் தனக்கு இலாகா ஒதுக்கவில்லை என ரங்கசாமி மீது பாஜக அமைச்சர் ஜான்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளாா்.
அமைச்சராக பதவி ஏற்று ஏழு மாதங்கள் கடந்தும் தனக்கு இதுவரை எந்த இலாகாவும் ஒதுக்கப்படவில்லை என புதுச்சேரி பாஜக அமைச்சர் ஜான்குமார் பகிரங்கமாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இலாகா வழங்கக் கூடாது என்று தனக்கு எதிராக சதி நடப்பதாக பாஜக அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளாா்.

இதுகுறித்து பேசிய ஜான்குமார், “அமைச்சராக பதவி ஏற்று ஏழு மாதங்கள் ஆன நிலையில் கூட இலாகா ஒதுக்கப்படாதது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இதனால் என் தொகுதி மக்கள் புதுச்சேரி அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்” என்று தெரிவித்தார். இலாகா இல்லாத காரணத்தால் மக்கள் தொடர்பான பணிகளை முழுமையாக செய்ய முடியாமல் தடை ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், முதலமைச்சர் ரங்கசாமி தன்னை என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்ததாக ஜான்குமார் குற்றம்சாட்டினார். அந்த அழைப்பை ஏற்க மறுத்ததால்தான் தனக்கு இலாகா வழங்கப்படவில்லை என்றும், “என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு செல்லாததால் முதலமைச்சர் தனக்கு இலாகா வழங்கவில்லை” என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் பாஜக நேரடி ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும், அந்த நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாகவும் ஜான்குமார் கூறினார்.


