spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது? - உச்சநீதிமன்றம்

மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது? – உச்சநீதிமன்றம்

-

- Advertisement -

பொதுக்கூட்டம் மற்றும் பேரணிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுப்பது தொடர்பான வழக்கில், ‘மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது?’ என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.மைதானத்தின் கொள்ளளவை தாண்டி மக்கள் கூடினால் என்ன செய்வது?  - உச்சநீதிமன்றம்நாடெங்கிலும் நடைபெறும் பொதுக்கூட்டங்கள், அரசியல் பேரணிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலில் சிக்கி பொதுமக்கள் உயிரிழப்பது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக கரூரில் விஜய் பிரசாரத்திலும் பெங்களூருவில் ஆர்சிபி நிகழச்சியிலும் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவங்களில் 56 பேர் பரிதாபமாக உயிரிழந்ததையும், உப்பார் திரையரங்க விபத்து குறித்தும் மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும் ‘கூட்ட நெரிசல்’ என்பதற்கு முறையான சட்டரீதியான வரையறை இல்லாததால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய விபத்துகளை தடுக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நாடு தழுவிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சூர்ய காந்த், ஜாய்மால்யா பாக்ஸி மற்றும் விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி சூர்ய காந்த், ‘தங்களது அடிப்படை உரிமை எனக்கூறி டெல்லியில் போராட்டம் நடத்துவோரை, பள்ளி குழந்தைகள், நோயாளிகள் மற்றும் முதியவர்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு குறிப்பிட்ட இடத்தில் நடத்துமாறு நம்மால் நெறிப்படுத்த முடியும்.

we-r-hiring

ஆனால் சென்னையில் ஒரு பேரணி நடப்பதாக வைத்துக்கொள்வோம்; அங்குள்ள மைதானத்தில் 10,000 பேர் மட்டுமே கூட முடியும் என்ற நிலையில், திடீரென 50,000 பேர் திரண்டால் என்ன செய்வது? அடிப்படை உரிமைகளுக்காக மக்கள் கூடுவதை எவ்வாறு தடுக்க முடியும்? அனைத்து ஊர்வலங்களுக்கும் பொதுவான உத்தரவுகளை பிறப்பித்தால், அதனை காவல்துறையினரால் எப்படி அமல்படுத்த இயலும்?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். குறிப்பிட்ட சூழலுக்கு மட்டுமே உத்தரவிட முடியுமே தவிர, அனைத்து கூட்ட நிகழ்வுகளுக்கும் பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இது நடைமுறையில் பெரும் சவாலானது என்ற கருத்தை பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு உள்துறை அமைச்சகம் மற்றும் தலைமை தேர்தல் ஆணையம் ஆகியோர் ஒரு கொள்கை முறை வழிகாட்டு முறைகளை எடுக்க வேண்டும். அதில் பாதுகாப்பு நடைமுறையும் நாடு முழுவதும் மேற்கொள்ள வேண்டும். மாநில அரசுகளும் இது சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தலோடு கூடிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தை தொடர்ந்து கர்நாடக சட்டசபையிலும் பரபரப்பு!!

MUST READ