Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி!

இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி!

-

 

இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி!
Photo: ICC

மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலி

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நேற்று (செப்.27) பிற்பகல் 01.30 மணிக்கு குஜராத் மாநிலம், ராஜ்காட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது.

முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 352 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில், வார்னர் 56 ரன்களையும், மார்ஷ் 96 ரன்களையும், ஸ்மித் 74 ரன்களையும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், பிரஷித் தலா ஒரு விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

பின்னர் 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.4 ஓவரில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 286 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் ஆஸ்திரேலியா அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி, ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

சென்னை: சாலையில் 10 அடி ஆழத்திற்கு திடீர் பள்ளம்- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

இந்திய அணி தரப்பில், கேப்டன் ரோஹித் சர்மா 81 ரன்களையும், விராட் கோலி 56 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 35 ரன்களையும் எடுத்தனர்.

தோல்வியைத் தழுவினாலும், இந்திய கிரிக்கெட் அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.

MUST READ