Homeசெய்திகள்விளையாட்டுகொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி!

கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி!

-

- Advertisement -

 

கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி!

கொல்கத்தா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சென்னை அணிக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஏப்ரல் 08) இரவு 07.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.

20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்களை எடுத்தது. சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ் பாண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 141 ரன்களை எடுத்தது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று பந்துவீச்சு!

இதனால் கொல்கத்தா அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணியின் மூன்றாவது வெற்றி இதுவாகும்.

MUST READ