Homeசெய்திகள்விளையாட்டு"கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் நம்பர் ஒன்"- விராட் கோலி புகழாரம்!

“கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் நம்பர் ஒன்”- விராட் கோலி புகழாரம்!

-

- Advertisement -

 

கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் தான் எப்போதும் நம்பர் ஒன் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!

சச்சின் டெண்டுல்கரைப் பார்த்தே தான் வளர்ந்ததாகவும், தற்போது அவருடைய சாதனையை சமன் செய்திருப்பது ஒரு கனவு போல் உள்ளதாகவும் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். பி.சி.சி.ஐ.க்கு பேட்டியளித்துள்ள விராட் கோலி, பிறந்தநாளின் போது சச்சினின் சாதனையை சமன் செய்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

‘டைம் அவுட் விக்கெட்’- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!

சச்சின் வாழ்த்தியது போல், 50வது ஒருநாள் சதத்தை விரைவாகப் பதிவுச் செய்ய விரும்புவதாகவும் விராட் கோலி தெரிவித்துள்ளார். நடப்பு உலகக்கோப்பை அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில், சதம் விளாசுவது அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் செல்லும். எனவே சிறப்பாக விளையாடி, அணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதே எனது முழு நோக்கமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

MUST READ