spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு'டைம் அவுட் விக்கெட்'- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!

‘டைம் அவுட் விக்கெட்’- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!

-

- Advertisement -

 

'டைம் அவுட் விக்கெட்'- மேத்யூஸ், ஷகிப் விளக்கம்!
Photo: ICC

வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் செயல் மோசமானது என இலங்கை அணியின் வீரர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்- வாக்குப்பதிவு விறுவிறு!

சர்வதேச கிரிக்கெட்டில் முதல் முறையாக டைம் அவும் விதி மூலம் இலங்கை வீரர் மேத்யூஸ் ஆட்டமிழந்தார். இது குறித்து பேசிய வீரர் மேத்யூஸ், தான் எந்த தவறும் செய்யவில்லை, இரண்டு நிமிடத்தில் தான் மைதானத்திற்கு வந்ததாகவும், ஹெல்மெட்டில் இருந்த பிரச்சனை காரணமாக, மாற்றச் சென்றதால் காலதாமதம் ஏற்பட்டது எனவும் விளக்கம் அளித்தார்.

வீரர்களின் பாதுகாப்பு முக்கியம் எனக் கூறும் போது, இது எப்படி தவறாகும்; ஹெல்மெட் இல்லாமல் விளையாடலாமா என மேத்யூஸ் கேள்வி எழுப்பினார். போட்டி முடிந்ததும் கைக் குலுக்காமல் சென்றது குறித்த கேள்விக்கு அவர்கள் மதித்தால், நாங்களும் மதிப்போம் என்று பதிலளித்தார்.

வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற மிசோரம் முதலமைச்சர்!

இது குறித்து பேசிய வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், “ஐ.சி.சி. விதிகளின்படி, இரண்டு நிமிடத்தில் பேட், ஹெல்மெட் என அனைத்துடனும் பேட்டர் களத்தில் இருக்க வேண்டும்; எனவே, இது குறித்து நான் கவலைப்படவில்லை; ஐ.சி.சி. விதிப்படியே செயல்பட்டுள்ளேன். விமர்சிக்கப்படுமானால் ஐ.சி.சி. விதிகளை மாற்றிக் கொள்ளட்டும்” எனத் தெரிவித்தார்.

MUST READ