சன் ரைசர்ஸ் ஜதரபாத் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

10 அணிகள் பங்கேற்கும் 17வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 22ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், சன் ரைசர்ஸ் ஜதரபாத் அணியின் புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தனது சமூக வலைதள பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸை, ஐதராபாத் அணி 20.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது.
இந்த நிலையில், பேட் கம்மின்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலக்கோப்பையை பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி வென்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. முன்னாள் சாம்பியனான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 23ஆம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் சந்திக்கிறது.