spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி!

பெங்களூரு அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி!

-

- Advertisement -

 

Photo: IPL Twitter Page

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 50வது லீக் போட்டி, நேற்று (மே 06) இரவு 07.30 மணியளவில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

we-r-hiring

“இனிமே எனக்கு மார்வெல் படத்துல நடிக்க சான்ஸ் கிடைக்கும், ஏன்னா”… நடிகை க்ரீத்தி ஷெட்டி!

முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. அந்த அணியில், அதிகபட்சமாக விராட் கோலி 55 ரன்களையும், டூ பிளெசிஸ் 45 ரன்களையும், லொம்ரோர் 54 ரன்களையும் எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 16.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. இதனால் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பழங்கால நங்கூரம்!

டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக, பிலிப் சால்ட் 87 ரன்களையும், ரிலீ 35 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

MUST READ