இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு வெள்ளிப்பதக்கம் வழங்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப்பிரிவில் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால் இறுதிப் போட்டிக்கு முன்பாக வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். தகுதி நீக்கத்தை எதிர்த்தும், வெள்ளிப் பதக்கத்தை பகிர்ந்து வழங்கக் கோரியும், சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மனு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கத்தை பகிர்ந்தளிக்க முடியாது என்று சர்வதேச விளையாட்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிகை குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.