Homeசெய்திகள்விளையாட்டு”சூப்பர் 8” சுற்றுடன் விடைபெற்றது அமெரிக்கா அணி!

”சூப்பர் 8” சுற்றுடன் விடைபெற்றது அமெரிக்கா அணி!

-

- Advertisement -
kadalkanni

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ”சூப்பர் 8” சுற்று ஆட்டத்தில் அமெரிக்கா அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற’சூப்பர் 8’ சுற்றில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. கென்னிங்க்ஸ்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்கா அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. நிதிஷ் குமார் 30 ரன்களிலும் கோரி ஆண்டர்சன் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்றவீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அமெரிக்கா அணியானது 18.5 ஓவர்களில் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் கிரிஸ் ஜோர்டன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி அதிரடியா விளையாடிய ஜாஸ் பட்லர் 83 ரன்களும் பில் சால்ட் 25 ரன்களும் எடுத்து எளிதில் வெற்றி பெற்றனர். இறுதியில் அணியானது 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி முதலாவது அணியாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அமெரிக்கா அணி தோல்வியுடன் வெளியேறியது. இங்கிலாந்து அணியின் ஆட்டநாயகனாக அடில் ரஷீத் தேர்வு செய்யப்பட்டார்.

MUST READ