Homeசெய்திகள்விளையாட்டுஇலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி

-

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க இலங்கைக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணியானது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா தலமையிலும் களம் காண்கின்றன. இதில் முதலாவது டி20 போட்டியானது பல்லகெலேவில் நேற்றிரவு 7 மணிக்கு நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து இந்திய அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ரன்களும், ரிஷப் பண்ட் 49 ரன்களும் எடுத்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 213 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் பந்துவீச்சு தரப்பில் மதிஷா பதிரானா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 79 ரன்களிலும் குஷால் மெண்டிஸ் 45 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 19.2 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பந்துவீச்சு தரப்பில் ரியான் பராக் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

MUST READ