
நடந்து முடிந்த ஐ.சி.சி. உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருடன் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் பணி காலம் நிறைவடைந்திருக்கும் நிலையில், அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக வி வி.எஸ்.லக்ஷ்மண் நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஆவடி காமராஜர் நகர் பகுதியில் அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்
இன்று (நவ.23) தொடங்கும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக உள்ள வி.வி.எஸ்.லக்ஷ்மண், தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பணியில் தொடர ராகுல் டிராவிட் ஆர்வம் காட்டவில்லை என்றும், அதே வேளையில் லக்ஷ்மண் அந்த பணியைச் செய்ய தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரிகளிடம் பேசி உள்ளதாகவும், இந்திய அணியின் தென்னாப்பிரிக்கா பயணம் முதல் முழு நேர பயிற்சியாளராக வி.வி.எஸ்.லக்ஷ்மண் பணியைத் தொடங்குவார் என பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆவடியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் : முன்னாள் அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல்
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடர், வரும் டிசம்பர் 10- ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், வரும் டிசம்பர் 04- ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.