2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2024- ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ள சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு- முடித்து வைத்த உயர்நீதிமன்றம்!
அதன்படி, இந்திய அணி, உலகக்கோப்பைத் தொடருக்கு முன்பாக, வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், நவம்பர் 23- ஆம் தேதி முதல் டிசம்பர் 1- ஆம் தேதி வரை ஐந்து போட்டிகள் கொண்ட 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி விளையாடவுள்ளது.
அதன்பின், அடுத்தாண்டு ஜனவரி மாதம், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று 20 ஓவர் போட்டிகள், பின்னர், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி விளையாட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“பட்டாசு ஆலை விபத்து- ரூபாய் 3 லட்சம் நிதி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
இதில் எந்தவொரு போட்டியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.