
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தி அணி அபார வெற்றி பெற்றது.

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு- பொதுமக்களுக்கு அழைப்பு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (அக்.11) மதியம் 02.00 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் அதிகபட்சமாக ஷாஹிடி 80 ரன்களையும், கேப்டன் ஹஷ்மத்துல்லா 62 ரன்களையும் எடுத்தனர்.
இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், தாகூர், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!
பின்னர் விளையாடிய இந்திய அணி தரப்பில் களமிறங்கிய கேப்டன் ரோஹித் சர்மா 131 ரன்களையும், இஷான் கிஷன் 47 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அதைத் தொடர்ந்து, விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதானமாக விளையாடி, ரன்களைக் குவித்து வெற்றி இலக்கை எட்டியது. இந்திய அணி 35 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்களை எடுத்து, ஆப்கானிஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடிய, இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.