3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வி
சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரையும் இழந்தது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஓரளவுக்கு தாக்கு பிடித்து ஆடிய ஆஸ்திரேலியா அணி வீரர்கள் 49 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 269 ரன்கள் சேர்த்தனர். அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 47 ரன்கள் சேர்த்தார்.
270 என்ற இலக்கை துரத்திய இந்திய அணியின் ரோகித் சர்மா 30 ரன்களில் அவுட் ஆனார். சுப்மன் கில் 37 ரன்களில் அவுட் ஆன நிலையில் விராட் கோலி, ராகுல் இணை ஓரளவு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் ஆடியது. சிறப்பாக ஆடிய கோலி தனது 65 ஆவது அரசத்தை அடித்தார். என்றாலும் மற்றவர்கள் நிலைத்து ஆடாததால் இந்திய அணி 248 ரண்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் 2-1 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியா அணி கோப்பையை வென்றது. இதன் மூலம் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் இந்தியா அணி ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. ஐசிசி ஒருநாள் அணிக்கான தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தையும் இந்தியா பறிகொடுத்துள்ளது.