Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

-

இந்திய அணியின் சீருடையில் காவி நிறம் இடம் பெற்றிருப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

9 ஆவது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவில் நடைபெற உள்ளது. ஜூன் மாதம் 2 ஆம் தேதி போட்டி தொடங்கும் நிலையில் இந்திய அணி 5 ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொள்கிறது.

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்திய அணிக்கு புதிய சீருடையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய அணியின் சீருடை மற்றும் உபகரணங்கள் விளம்பரதாரர் உரிமத்தை பெற்றுள்ள அடிடாஸ்  நிறுவனம் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.

இந்திய அணி சீருடை காவி இடம்பெற்றதால் விமர்சனம்

தர்மசாலாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அணியின் ராட்சத ஜெர்சியை ஹெலிகாப்டர் சுமந்து வந்து அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

சீருடை அறிமுக விழாவில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, சூழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதுவரை இந்திய அணியின் சீருடை நீல நிறத்தில் இருந்து வந்த நிலையில் புதிய சீருடையின் இரண்டு கைகளிலும் காவி நிறம் இடம் பெற்றுள்ளது.

மேலும் காலரில் இந்திய கொடியை குறிக்கும் வகையில் மூவர்ணம் இடம் பெற்றுள்ளது. இந்திய அணியின் சீருடை காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதா என்று நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர் .

MUST READ