spot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்து அணி 420 ரன்களுக்கு ஆல் அவுட் 

இங்கிலாந்து அணி 420 ரன்களுக்கு ஆல் அவுட் 

-

- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்கிஸில் 420 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

we-r-hiring

பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இப்போட்டியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதில் முதலாவது டெஸ்ட் 25ம் தேதி முதல்29 தேதி வரை நடைபெறவுள்ளது. முதலாவது டெஸ்ட் ஹைதரபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி முதன் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளூம், அக்‌ஷர் பட்டேல் மற்றும் பும்ரா தலை 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 436 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜடேஜா 87 ரன்களும், ராகுல் 86 ரன்களும், ஜெய்ஷ்வால் 80 ரன்களும் எடுத்தனர். இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 420 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக அல்லி போப் 196 ரன்கள் குவித்தார். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக பும்ரா தலா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

MUST READ