spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியாvsஇங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழைக் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

இந்தியாvsஇங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் மழைக் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

-

- Advertisement -

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறவுள்ள இந்தியாVSஇங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 2வது அரையிறுதி ஆட்டமானது தொடர் மழைக் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

we-r-hiring

டி20 உலக கோப்பை தொடர் அமேரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, வங்கதேசம் ஆகிய 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. இதில் குரூப் 1 பிரிவில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானும், குருப் 2 பிரிவில் தென் ஆப்ரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. முதல் அரையிறுதி சுற்று இன்று காலை நடைபெற்ற நிலையில், அதில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்ரிக்க அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று இரவு நடைபெறவுள்ள 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியானது இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு கயானா மைதானத்தில் நடைபெறவுள்ளது. தொடர் முழுவதும் தோல்வியையே சந்திக்காத இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இப்போட்டியானது தொடர் மழைக் காரணமாக ஆட்டமானது டாஸ் போடாமலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இன்றைய போட்டியானது மழை முழுவதுமாக பெய்து ஆட்டம் ரத்தானால் இந்திய அணியே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ