spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஇங்கிலாந்துக்கு பதிலடி - 2வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி

இங்கிலாந்துக்கு பதிலடி – 2வது டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி

-

- Advertisement -

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்குக் இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

we-r-hiring

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ்சில் 396 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்தார். இதனைத்தொடர்ந்து முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி பும்ரா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 253 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் பும்ரா 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

143 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் சுப்மான் கில் 104 ரன்கள் எடுத்தார். இதனைத் தொடர்ந்து 399 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது 1-1 என்ற நிலையில் சம நிலையில் உள்ளது.

MUST READ