Homeசெய்திகள்விளையாட்டுலக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி அபாரம்!

லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி அபாரம்!

-

- Advertisement -

 

லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி அபாரம்!
Photo: IPL

ஐ.பி.எல். தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (மே 24) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற ஐ.பி.எல். சிரிக்கெட் தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில், முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா 11 ரன்களிலும், இஷான் கிஷன் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களம் கண்ட சூர்யக்குமார் யாதவ், கேமரூன் க்ரீன் ஜோடி அதிரடி காட்டினர். சூர்யக்குமார் யாதவ் 33 ரன்களிலும், கேமரூன் க்ரீன் 41 ரன்களிலும் ஆட்டமிழந்த பிறகு ஆட்டத்தின் போக்கு மாறியது.

20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி தொடக்கத்தில் இருந்தே தடுமாறியது. 16.3 ஓவர்களில் 101 ரன்களுக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சிங்கப்பூர் அமைச்சருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!

இந்த வெற்றியின் மூலம் நாளை நடைபெறும் இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது.

MUST READ