
16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எந்த ஐ.பி.எல். தொடரிலும் இல்லாத அளவுக்கு அதிக சிக்ஸர்களை அடித்து வீரர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைப் பொறுத்த வரை, ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் மட்டும் தான். ரசிகர்களின் ஆசையைப் பூர்த்திச் செய்யும் வகையில், வீரர்களும் ஆண்டுக்கு ஆண்டு பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டு அசத்தி வருகின்றனர்.
அதிலும், இந்தாண்டு இம்பாக்ட் பிளேயர் என்ற புதிய முறை கொண்டு வரப்பட்டதால், 200 ரன்களை ஒரு அணி எடுத்தால் கூட, எதிரணி எளிதாக வெற்றி பெறும் சூழலைக் காண முடிந்தது. 200- க்கும் மேல் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு, இந்தாண்டு 8 முறை சேஸ் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, மும்பை அணி நான்கு முறை 200- க்கும் ரன்களை சேஸ் செய்துள்ளது. இதனால் மற்ற சீசன்களை விட, இந்த சீசனில் அதிக சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன.
“ஆவின் நிறுவனத்துடன் நாங்கள் போட்டியிடவில்லை”- அமுல் நிறுவன தமிழக ஒப்பந்ததாரர் விளக்கம்!
ஐ.பி.எல். தொடங்கிய ஆண்டான, 2008- ஆம் ஆண்டு 622 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, கடந்த 2009- ஆம் ஆண்டு 506 சிக்ஸர்களும், 2010- ஆம் ஆண்டு 585 சிக்ஸர்களும், 2011- ஆம் ஆண்டு 639 சிக்ஸர்களும், 2012- ஆம் ஆண்டு 731 சிக்ஸர்களும், 2013- ஆம் ஆண்டு 672 சிக்ஸர்களும், 2014- ஆம் ஆண்டு 714 சிக்ஸர்களும், 2015- ஆம் ஆண்டு 692 சிக்ஸர்களும், 2016- ஆம் ஆண்டு 638 சிக்ஸர்களும், 2017- ஆம் ஆண்டு 705 சிக்ஸர்களும், 2018- ஆம் ஆண்டு 872 சிக்ஸர்களும், 2019- ஆம் ஆண்டு 784 சிக்ஸர்களும், 2020- ஆம் ஆண்டு 734 சிக்ஸர்களும், 2021- ஆம் ஆண்டு 687 சிக்ஸர்களும், 2022- ஆம் ஆண்டு 1,062 சிக்ஸர்களும், நடப்பாண்டு 1,075 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டன.


