spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!

2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!

-

- Advertisement -

 

2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மெகா ஏலம் துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல்!
File Photo

அடுத்தாண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம், துபாயில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

“இந்திய துறைமுகங்களில் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பது அவசியம்”- குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேச்சு!

உலக அளவில் வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, ஆண்டுதோறும் இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 2024- ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடருக்கான வரும் டிசம்பர் மாதம் 19- ஆம் தேதி அன்று துபாயில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் ஐ.பி.எல். ஏலம் ஏற்கனவே கடந்த 2014, 2020, 2021 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளது. ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் பங்கேற்கும் அணியின் ஏலத்தொகை ஒவ்வொரு அணிக்கும் தலா 5 கோடி ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 100 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் பங்கேற்கும் நிலையில், அதற்கான வீரர்கள் ஏலம் மூலம் தேர்வுச் செய்யப்படவுள்ளனர்.

“மூன்று மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு”- வானிலை ஆய்வு மையம் தகவல்!

ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு வீரர்கள் நான்கு பேர், பிளெயிங் லெவனின் இடம் பெறுவார்கள். கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் இங்கிலாந்து அணியின் வீரர் சாம் கரண் 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதே அதிகபட்சத் தொகையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ