Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் 2ம் கட்ட அட்டவணை வெளியானது - மே 26ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி!

ஐபிஎல் 2ம் கட்ட அட்டவணை வெளியானது – மே 26ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி!

-

சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!

நடப்பு ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியானது. மே 26ம் தேதி சென்னையில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது

17வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஐபிஎல் தொடரில் முதல்கட்ட அட்டவணை மட்டுமே வெளியானது. கடந்த பிப்ரவரி மாதம் 22ம் தேதி பிசிசிஐ முதல்கட்ட ஐபிஎல் அட்டவனையை வெளியிட்டது. மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 07ம் தேதி வரை நடைபெறும் போட்டிக்கான அட்டவனையை வெளியிட்டது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டாம் கட்ட அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான இரண்டாம் கட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இறுதிப் போட்டி இந்த முறை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் தகுதி சுற்று அகமதாபாத் மைதானத்திலும், இரண்டாவது தகுதி சுற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெறவுள்ளது. இதேபோல் வெளியேறுதல் சுற்று சென்னை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

MUST READ