ஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டிற்கு மாற்றுவதற்கான திட்டம் இல்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. . இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் இரண்டு கட்டங்களாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் முதல்கட்டமாக 21 போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்டது. மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2ம் கட்ட அட்டவணை வெளியாகும் என கூறப்பட்டது. வருகிற மார்ச் மாதம் 22ம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாஃப் டூபிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இது குறித்து ஜெய்ஷா அளித்துள்ள பேட்டியில், ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட இருப்பதாக வெளியான செய்திகளை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுத்துள்ளார். மக்களவைத் தேர்தல் நடைபெறும் காரணத்தினால் ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படலாம் என செய்திகள் வெளியாகின. இது குறித்து ஜெய் ஷா அளித்துள்ள பேட்டியில், “ஐபிஎல் போட்டிகள், வெளிநாட்டுக்கு மாற்றுவதற்கான திட்டம் ஏதுமில்லை எனவும் உள்நாட்டிலேயே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.