ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பல ஆச்சர்யங்கள் நடந்துள்ளதுஅன். இந்த ஏலத்தில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் வரலாற்றில் மிகப்பெரிய ஏலம் இந்த முறை மட்டுமே நிகழ்ந்துள்ளது. ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஏலத்தில் ஒரு வீரரின் அதிர்ஷ்டம் யாராலும் நம்ப முடியாத அளவுக்கு நிகழ்துள்ளது. கடந்த சீசன் வரை லட்சங்களில் சம்பாதித்த இந்த வீரரில் சம்பளம் இந்த முறை 5500% அதிகரித்துள்ளது.
ஐபிஎல் 2025க்கான ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் போலவே இந்த முறையும் ஆர்சிபி அணி பல ஆச்சரியமான முடிவுகளை எடுத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, ஜிதேஷ் ஷர்மா என்ற இளம் வீரரை வாங்குவதற்கு நிறைய பணம் செலவழித்தது. இந்த ஏலத்தில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மாவை ரூ.11 கோடி கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
கடந்த சீசன் வரை ஐபிஎல்லில் ஜிதேஷ் ஷர்மாவின் சம்பளம் ரூ.20 லட்சமாக இருந்தது. ஐபிஎல் 2022 ஏலத்தில் அவர் பஞ்சாப் அணியால் அவரது அடிப்படை விலையில் வாங்கப்பட்டார். இதற்குப் பிறகு, அடுத்த இரண்டு சீசன்களிலும் அதே விலையில் இருந்தார். கடந்த சீசனில் பஞ்சாப் அணியின் துணை கேப்டனாகவும் இருந்தார். ஆனால் இந்த முறை அவரை பஞ்சாப் தக்கவைக்கவில்லை. அதனால் அவர் ஏலத்திற்கு வந்தார். இப்போது ஜிதேஷ் தனது முந்தைய ஐபிஎல் சம்பளத்தை விட 5500 மடங்கு அதிகம் பெற்றுள்ளார். தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ஆர்சிபி அணி ஒரு கீப்பர்-பேட்ஸ்மேன் தேவை என உணர்ந்தது. இந்நிலையில் ஆர்சிபி அணி ஜிதேஷை மிகப்பெரிய ஏலத் தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
ஜிதேஷ் சர்மா ஐபிஎல் 2022 ல் இருந்து ஐபிஎல்.லில் விளையாடி வருகிறார். இதுவரை ஐபிஎல்லில் 40 போட்டிகளில் 22.81 சராசரியில் 730 ரன்கள் எடுத்துள்ளார். அவரது ஒட்டுமொத்த ஸ்ட்ரைக் ரேட் 151க்கு மேல் உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு 131.69 ஆக இருந்தது. கடந்த சீசனில் அவர் 14 போட்டிகளில் 187 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஜிதேஷ் ஷர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். ஜிதேஷ் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றார், ஆனால் அவருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.